உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சர்க்கரை நோய் விழிப்புணர்வு நடை போட்டி

சர்க்கரை நோய் விழிப்புணர்வு நடை போட்டி

தேனி : தேனி நலம் மருத்தவமனை சார்பில், உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடை போட்டி நடந்தது.இம்மருத்துவமனை முன் துவங்கிய போட்டியை எஸ்.பி., சிவபிரசாத் துவக்கி வைத்தார். மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜ்குமார் பாலசங்கா குழும நிர்வாக இயக்குனர் கதிரேசன் முன்னிலை வகித்தனர். போட்டி மருத்துவமனையில் துவங்கி அல்லிநகரம், பெரியகுளம் ரோடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தெரு சந்திப்பு வரை சென்று, அங்கிருந்து பெரியகுளம் - தேனி ரோடு வழியாக பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட், நேருசிலை சென்றது. பின் மீண்டும் மருத்துவமனை வளாகத்திற்கு வந்து நிறைவடைந்தது. நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.செந்தில்குமார் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், லோகதுரை 2ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3ம் பரிசாக பிரகதீஸ்வரன் ரூ.2 ஆயிரம் பெற்றனர். பொதுப் பிரிவில் முருகேசன் முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2ம் பரிசாக ராஜேஷ்கண்ணா ரூ.2 ஆயிரம், 3ம் பரிசாக ஜெயகுமார் ரூ.ஆயிரம் வென்றனர். இதுதவிர 10 நபர்களுக்கு சிறப்பு பரிசுகள் பெற்றனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் துளசிச் செடிகள் இலவசமாக வழங்கப்பட்டன. டி.எஸ்.பி.சக்திவேல், மருத்துவமனை ஆலோசகர் டாக்டர் பிரபாகரன், ஏ.டி.எஸ்.பி.,சுகுமாரன், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் ஜெயராமன், மருத்துவ மேலாளர் டாக்டர் முகமது பாசித், குழந்தைகள் சிறுநீரகவியல் துறைத் தலைவர் டாக்டர் அர்பிதா, மருத்துவமனை மருந்தகங்களின் நிர்வாக அலுவலர் வனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மருத்துவமனை மனித வள மேலாளர் நவீன் உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி