உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குறுங்காடு பராமரிப்பதில் சிக்கல்

குறுங்காடு பராமரிப்பதில் சிக்கல்

கூடலுார், செப். 15- கூடலுாரில் புதிதாக உருவாக்கப்பட்ட அடர்வன குறுங்காடுக்கு உள்ளே செல்ல முடியாமல் அடையாளம் தெரியாத நபர்கள் பூட்டு போட்டு சென்றதால் தண்ணீர் ஊற்றி பராமரிக்க முடியாமல் புலம்பியுள்ளனர். கூடலுார் ஆய்வாளர் மாளிகை அருகே மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் சோலைக்குள் கூடல் அமைப்பினர் குறுங்காடு அமைத்துள்ளனர். வேம்பு, பூவரசு, வில்வம், சரக்கொன்றை, புங்கை, நாவல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் நடவு செய்துள்ளனர். சுற்றிலும் வேலி அமைத்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அடையாளம் தெரியாத சிலர் குறுங்காடுக்குள் செல்லாத முடியாத வகையில் வேலியில் பூட்டு போட்டு பூட்டி சென்றனர். இது பற்றி மாநில நெடுஞ்சாலைத்துறையினரிடம் அமைப்பினர் புகார் தெரிவித்தனர். ஆனாலும், பூட்டு திறக்கப்படாதால் மரக்கன்றுகளை பராமரிக்க முடியாத நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை