ஒதுக்கீடு செய்த வாகனங்களுக்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள்
தேனி: மாற்றுத்திறனாளிகளுக்காக மூன்று சக்கர மோட்டார் சைக்களில் 200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதில் 70 பேருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. தயார் நிலையில் இருக்கும் உள்ள வாகனங்களை வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், அலைபேசி, பொருட்களை பெரிதாக்கி காட்டும் கருவி, கூடுதல் சக்கரம் பொருத்தப்பட்ட டூவீலர்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 200 பேருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக மாற்றுத்திறனாளிகள் நேர்முக தேர்வு நடத்தி, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வானவர்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் இதுவரை 70 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.பெரும்பாலானவர்களுக்கு டூவீலர் எண் உள்ளிட்டவை பற்றி அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பபட்டுள்ளது. ஆனால், டூவீலர் வழங்கப்படவில்லை.ஒதுக்கீடு செய்யப்பட்ட டூவீலர்களை விரைந்து வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.