மேலும் செய்திகள்
நுாலகத்தில் வாசிப்பரங்க நிகழ்வு
12-Jan-2026
கம்பம்: கம்பத்தில் அறிவியல் இயக்கத்தின் சார்பில் சமூக ஜனநாயக கையேடு என்ற நூல் தொடர்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. எழுத்தாளர் சுந்தர் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க பொருளாளர் லாவண்யா வரவேற்றார். மாவட்ட தலைவர் மகேஷ் கலந்துரை யாடலை துவக்கி வைத்தார். எழுத்தாளர்கள் தனசேகரன், வெங்கட், முத்துக் கண்ணன், முரளி, திலீபன், ராஜிலா ரிஸ்வான், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஜாதி, மத வேறுபாடுகளை களைய ஆசிரியர்கள், மாணவர்கள், அதிகாரிகள் மத்தியில் உரையாடல்களை நடத்த வேண்டுகோள் விடப்பட்டது.
12-Jan-2026