உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் ஸ்டேஷன் முன் தகராறு * 18 பேர் மீது வழக்கு

போலீஸ் ஸ்டேஷன் முன் தகராறு * 18 பேர் மீது வழக்கு

தேனி: சடையால் பட்டி காளியம்மன் கோயில் திருவிழா வரவு செலவு கணக்கு கேட்டதால் இருதரப்பு இடையே தகராறு ஏற்பட்டது. போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு வந்த இடத்தில் தகராறில் ஈடுபட்டு தாக்கிக்கொண்ட 18 பேர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.இக்கோயில் திருவிழா ஏப்.8 முதல் ஏப்.10 வரை நடந்தது. திருவிழா கணக்கு வழக்கு தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் இருதரப்பும் ஏப்.12 காலை விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷன் வந்தனர். ஸ்டேஷன் முன் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. போலீசார் விலக்கினர். ஒரு தரப்பை சேர்ந்த சடையால்பட்டி பிரகாஷ் 35 புகாரில், அதே ஊரைச் சேர்ந்த சிவமுருகேஸ்வர பாண்டியன், சீனிவாசன், ரமேஷ், தனபால், வெங்கிடசாமி, கிருஷ்ணசாமி, அமுதன், கண்ணன், சீனிவாசன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிந்தனர். மற்றொரு தரப்பை சேர்ந்த அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் 60, புகாரில் மாரியப்பன், தேவர், பிரகாஷ், ஈஸ்வரன், அஜீத், மணி, செல்வம், பாண்டியராஜ் ஆகிய 9 பேர் மீது வழக்கு பதிந்தனர்.போலீஸ் ஸ்டேஷன் முன் தாக்கி கொண்ட 18 பேர் மீது வழக்கு பதிந்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை