உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பம் அ.தி.மு.க., கூட்டத்தில் தகராறு

கம்பம் அ.தி.மு.க., கூட்டத்தில் தகராறு

கம்பம்: கம்பம் பார்க் திடலில் நேற்றிரவு மாவட்ட செயலாளர் ஜக்கையன் தலைமையில் அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சின்னமனுார் 13 வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் உமாராணியின் மகன் வெங்கடேசனுக்கும், சின்னமனுார் நகர செயலாளர் பிச்சைக்கனிக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தள்ளு முள்ளு ஏற்பட்டது.தன்னை தாக்கியதாக வெங்கடேசன் கம்பம் தெற்கு போலீசில் நகர் செயலாளர் பிச்சைக் கனி மற்றும் பிரகாஷ் மீது புகார் செய்தார்.அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்கிடையே தன்னை அவதுாறாக பேசியதாக நகர் செயலாளர் பிச்சைகனி, வெங்கடேசன் மீது போலீசில் புகார் செய்தார். விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !