உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு

 ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு

போடி: போடி காமராஜ் பஜார், பி.ஹைச்., ரோடு, போடி தேவாரம் மெயின் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். பகலில் சரக்கு வாகனங்களை நிறுத்தியும், மாலை 6:00 மணிக்கு மேல் பொறித்த மீன் கடைகள், பானிபூரி உள்ளிட்ட கடைகள் வைத்து ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகின்றன. இரவு நேரங்களில் டூவீலரில் செல்லும் போது பொறித்த மீன் மீது தூவப்பட்ட மிளகாய் பொடி காற்றில் பறந்து கண்களில் விழுகின்றன. இதனால் கண் எரிச்சலாகி வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. போக்குவரத்து நெரிசல், அடிக்கடி ஏற்படுகிறது. விபத்துகளை தடுக்க ரோட்டோர கடைகளை அகற்ற போலீசார், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி