உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்ட கலைத்திருவிழா போட்டி நாளை துவக்கம்

மாவட்ட கலைத்திருவிழா போட்டி நாளை துவக்கம்

தேனி: பள்ளி மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்த கல்வித்துறை சார்பில் கலைத்திருவிழா போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி, குறுவட்டம், வட்டார அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நாளை வீரபாண்டி சவுராஸ்டிரா கலை, அறிவியல் கல்லுாரியில் துவங்குகிறது. நாளை 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கும், அக்.,30 உதவி பெறும்பள்ளியில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கும் நடக்கிறது. தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை