உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நவ.11ல் மாவட்ட கலைத் திருவிழா போட்டி துவக்கம்

நவ.11ல் மாவட்ட கலைத் திருவிழா போட்டி துவக்கம்

தேனி: அரசு,உதவி பெறும்பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் மாவட்ட கலைத்திருவிழா போட்டிகள் நவ.,11ல் துவங்க உள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.மாவட்டத்தில் அரசு பள்ளிகள் 530 ,அரசு உதவி பெறும் பள்ளிகள் 216 என மொத்தம் 940 பள்ளிகள் உள்ளன. இதில் அரசு, உதவி பெறும் பள்ளிகளுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது.மாவட்டத்தில் குறுவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்து வருகிறது. தேனி குறு வட்டத்திற்கான கலைத்திருவிழா போட்டிகள் அல்லிநகரம் வட்டார வள மையத்தில் நடந்தது.இதில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், மாறுவேடப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், பாடல் பாடுதல், களிமண் பொம்மை செய்தல் போட்டிகள் நடந்தன.இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை