உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்ட கலைத்திருவிழா போட்டிகள் துவக்கம்

மாவட்ட கலைத்திருவிழா போட்டிகள் துவக்கம்

தேனி: தேனி மாவட்டத்தில் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் துவங்கியது.தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நடனம், கட்டுரை, இசைக்கருவிகள் வாசித்தல், சிற்பங்கள் செய்தல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு கலை திறன்களை வெளிகாட்ட கலைத்திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. பள்ளி, வட்டார அளவில் நடந்த கலைத்திருவிழா போட்டிகள் முடிவடைந்தன. மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் வீரபாண்டி சவுராஸ்டிரா கல்வியியல் கல்லுாரியில் நேற்று துவங்கியது. விழாவை கல்லுாரி முதல்வர் பிரபு துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் மோகன், வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கரியான் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1,2 படிக்கும் மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிக்காட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ