தேனியில் மாவட்ட செஸ் போட்டி
தேனி: தேனியில் தனியார் ஓட்டலில் கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி, தேனி ராயல் அரிமா சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. அகாடமி செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார், பொருளாளர் கணேஷ்குமார் மன்னிலை வகித்தார். ராயல் அரிமா சங்க தலைவர் பிரபு போட்டிகளை துவக்கி வைத்தார். அகாடமி தலைவர் சைது மைதீன் வரவேற்றார். 7 வயது பிரிவில் வருண்கிருஷ்ணன், தர்ஷன் பாண்டியன், 9 வயது பிரிவில் மதுன் கார்த்திக், சிந்துஜஸ்வின், 11 வயது பிரிவில் தியாஸ்ரீ, சாய்சரவணா, 14வயது பிரிவில் ஹரிஷ், முகமதுபராஸ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்கள் அக்., 26 தென்காசியில் நடைபெற உள்ள மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு எலைட் நவமணி ஜூவல்லரி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு ராயல் லையன் பட்டயத்தலைவர் செல்வகணேஷ், அகாடமி இணைச்செயலாளர் அமானுல்லா உள்ளிட்டோர் பரிசு வழங்கினர்.