உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மாவட்ட அளவிலான செஸ் போட்டி

 மாவட்ட அளவிலான செஸ் போட்டி

தேனி: தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. அகாடமி செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார். எட்டு வயது பிரிவில் ஆத்விக், சர்வேஸ்குமார், ஜிஸ்னு, 10 வயது பிரிவில் யுவகிருஷ்ணா, மகிமா, சுபத்திரன், 14 வயது பிரிவில் சாய்சரவணா, மாதவன், புவின்ராஜ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். போட்டிகளை நூர்ஜஹான், நடுவர் அஜ்மல்கான் ஒருங்கிணைத்தனர். அகாடமி தலைவர் சையது மைதீன், ஓய்வு பெற்ற வனச்சரகர் அமானுல்லா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். வெற்றி பெற்ற வீரர்கள் மார்ச் 1ல் தென்காசியில் நடைபெறும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை