உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மாவட்ட அளவிலான  செஸ் போட்டி

 மாவட்ட அளவிலான  செஸ் போட்டி

தேனி:தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. அகாடமி செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற ரேஞ்சர் அமானுல்லா, கராத்தே மாஸ்டர் முத்தையா போட்டிகளை துவக்கி வைத்தனர். அகாடமி தலைவர் சையது மைதீன் வரவேற்றார். 8- வயது பிரிவில் வருண்கிருஷ்ணன், ஆத்விக், சர்வேஷ்குமார், 10 வயது பிரிவில் ஆதேஷ், ரிஷிவரதன், பிரனவ்அக்சன், 15 வயது பிரிவில் தியா ஸ்ரீ , நிலேஷ் முகுந்தன், அகிலேஷ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். தேசிய நடுவர் அஜ்மல்கான் நடுவராக செயல்பட்டார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை அகாடமி பொருளாளர் கணேஷ்குமார் உள்ளிட்டோர் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி