மேலும் செய்திகள்
கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் நியமனம்
08-May-2025
தேனி : தேனியில் தி.மு.க., வடக்கு மாவட்டம் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டிகள் நேற்று துவங்கியது.தி.மு.க., வடக்கு மாவட்டம் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழாக்களை முன்னிட்டு மாநில அளவிலான ஏ கிரேடு கபடி போட்டிகள் நேற்று மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்கியது. தேனி வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான தங்கதமிழ்செல்வன் போட்டிகளை துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ., சரவணக்குமார் முன்னிலை வகித்தார். ஆண்கள், பெண்கள் பிரிவில் கோவை, மதுரை, சென்னை, அரக்கோணம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. இன்றைய போட்டிகளை தி.மு.க., துணைப்பொதுச்செயலாளர் சிவா துவங்கி வைக்கிறார். இறுதி போட்டிகள் நாளை நடக்கிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு அமைச்சர் பெரியசாமி பரிசுகள் வழங்க உள்ளார்.
08-May-2025