உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தி.மு.க., முப்பெரும் விழா மாநில  கபடி போட்டி துவக்கம்

தி.மு.க., முப்பெரும் விழா மாநில  கபடி போட்டி துவக்கம்

தேனி: தேனியில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரின் பிறந்தநாள் முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மே 27, 28, 29ல்மாநில அளவிலான 'ஏ' கிரேடு லீக் சுற்று கபடி போட்டிகள் நடக்க உள்ளன. இன்று மாலை 5:00 மணிக்கு போட்டியை தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் துவக்கி வைக்கிறார். மே 28ல் தி.மு.க., துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., போட்டியை துவக்குகிறார். வெற்றி பெற்ற அணிகளுக்கு மே 29ல் அமைச்சர் பெரியசாமி கேடயம், பரிசுகளை வழங்குகிறார். நிகழ்ச்சியில் பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார் முன்னிலை வகிக்கிறார். போட்டிக்கான ஏற்பாடுகளை செய்துள்ள தேனி எம்.பி., கூறியதாவது: பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கபடி அணிகள் பங்கேற்கின்றன. பெண்கள்பிரிவில் 19 அணிகளும், ஆண்கள் பிரிவில் 16 அணிகளும் லீக் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளன. ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், 2வது பரிசு ரூ.75 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ.50 ஆயிரம், 4வது பரிசு ரூ.30 ஆயிரம் ரொக்கம், சான்றிதழ் வழங்க உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ