மேலும் செய்திகள்
விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்தவருக்கு அடி
09-Oct-2025
பெரியகுளம்: பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த 11 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சாந்தி 50. பெண்கள் சுகாதார வளாகம் செல்லும் பாதையில், இருள் சூழ்ந்து இருந்ததால் இரு மின் விளக்கு அமைப்பதற்கு சாந்தி முயற்சி மேற்கொண்டார். இந்நிலையில் வீட்டின் முன் நின்றிருந்த சாந்தியை, 'எங்களை கேட்காமல் எப்படி மின் விளக்கு அமைக்கலாம்,' என கேட்டு இதே பகுதியைச் சேர்ந்த சிவன், இவரது உறவினர்கள் கவுதம், பஞ்சம்மாள், அம்மாள் ஆகியோர் அடித்து காயப் படுத்தினர். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சாந்தி அனுமதிக்கப்பட்டார். தென்கரை போலீசார் சிவன் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
09-Oct-2025