உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  சுகாதார வளாகத்தை ரூ.10.70 லட்சத்தில் சீரமைத்து பூட்டி வைத்துள்ள அவலம்  தி.மு.க., பெண் கவுன்சிலர் குறைதீர் கூட்டத்தில் புகார்

 சுகாதார வளாகத்தை ரூ.10.70 லட்சத்தில் சீரமைத்து பூட்டி வைத்துள்ள அவலம்  தி.மு.க., பெண் கவுன்சிலர் குறைதீர் கூட்டத்தில் புகார்

தேனி: ''காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி கீழக்கு வெளி வீதியில் ரூ.10.70 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட பின்பும், பூட்டயே வைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.'' என, தி.மு.க., பெண் கவுன் சிலர் கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., ராஜகுமார் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார் மனு அளித்தார். நிகழ்வில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி 4வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் வெற்றிச்செல்வி வழங்கிய மனுவில், 'பேரூராட்சியில் 4வது வார்டிற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரமால் பேரூராட்சி நிர்வாகம் தவிர்த்து வருகிறது. கிழக்கு வெளி தெருவில் சமுதாய கழிப்பிடம் ரூ.10.70 லட்சத்தில் சீரமைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. வேதகோயில் தெருவில் புதிய ஆழ்துளை கிணறு, தண்ணீர் தொட்டி அமைக்க டெண்டர் விடப்பட்டு 6 மாதங்களாகியும் இதுவரை டெண்டர் விடவில்லை. வடக்கு ரத வீதி, மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள ஆழ்துளை கிணறுகளில் மின்மோட்டார்கள் பழுதாகி 2 மாதங்களுக்கு மேல் ஆகிறது. பேரூராட்சியில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிப்படுகின்றனர் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. தேக்கம்பட்டி எட்டப்பராஜபுரம் ராஜூ பொது மக்கள் சார்பில் வழங்கிய மனுவில், 'எட்டப்பராஜபுரத்தில் இருந்து தேக்கம்பட்டி செல்லும் ரோட்டில் இருபுறமும் நீர்ரோடைகள் இருந்தன. விவசாய நில உரிமையாளர்கள் ஓடையை ஆக்கிரமித்து விட்டனர். இதனால் சாக்கடை நீர் வெளியேற வழியில்லாமல் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே குளம் போல் தேங்கியது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாக்கடை கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. தேவதானப்பட்டி அண்ணாநகர் ஆனந்த் பொது மக்கள் சார்பில் வழங்கிய மனுவில், 'சில மாதங்களுக்கு முன் எங்கள் பகுதியில் சாக்கடை அமைப்பதற்காக குழிகள் தோண்டினர். ஆனால் இதுவரை பணிகள் முடிக்க வில்லை. இதனால் பாதையில் செல்ல முடியாத நிலை தொடர்கிறது. குழியை தாண்டி அனைவரும் செல்லும் நிலை தொடர்கிறது. சாக்கடையை சீரமைத்து பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்., என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூ., தேனி தாலுகா செயலாளர் தர்மர் வழங்கிய மனுவில், 'தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு பொட்டல்களத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பட்டியலின மக்களுக்கு 2 சென்ட் இடம் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் பட்டா வழங்கிய இடத்தில் இரு வீடுகள் வீதம் அரசு கட்டி உள்ளது. பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்குவதில் உள்ள குளறுபடிகளை களைந்து, பயனாளிகளுக்கு வீடுகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருந்தது. தலித் எஸ்.சி., எஸ்.டி., மக்கள் சம்மேளனம் அமைப்பு போடி நிர்வாகி சிவக்குமார் தலைமையில் நகராட்சி காலனி பொது மக்கள் வழங்கிய மனுவில், 'எங்கள் பகுதியில் சேவா சங்கக் கட்டடம், சுகாதார வளாகங்கள், மின் இணைப்பு, சாக்கடை வசதி உள்ளிட்டவை செய்து தரப்பட்டிருந்தன. சில ஆண்டுகளுக்கு முன் புதுப்பித்து தருவதாக நகராட்சி சார்பில் சேவா சங்க கட்டடம், சுகாதார வளாக கட்டடம், அங்கன்வாடி மையத்தை இடித்தனர். ஆனால், இதுவரை புதிதாக அமைத்து தர வில்லை. இதனை கட்டி தராவிட்டால் வரும் காலங்களில் நடக்க உள்ள அனைத்து தேர்தல்களையும் புறக் கணிப்போம். வழங்கப்பட்டுள்ள வாக்காளர்பட்டியில் திருத்த பணிக்கான படிவத்தை பூர்த்தி செய்து வழங்கமாட்டோம்., என குறிப்பிடப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்