உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க களப்பணியாற்றுங்கள்

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க களப்பணியாற்றுங்கள்

கம்பம் : இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க தோட்டக்கலைத்துறையினர் களப்பணியாற்ற வேண்டும் என தோட்டக்கலைத்துறை ஆணையரகம் கேட்டுக் கொண்டுள்ளது.காய்கறி, பழப்பயிர்கள் சாகுபடியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. ஏற்றுமதியில் தரப்பரிசோதனை செய்யும்போது, பூச்சி கொல்லி மருந்துகள், ரசாயன உரங்கள் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக இருப்பது கண்டுபிடித்து அதை குறைக்கு அறிவுறுத்தப்பட்டது.மண் வளம் குறைந்து,நன்மை செய்யும் பூச்சி இனங்கள் அழிந்து வருகிறது.எனவே, ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து, இயற்கை வேளாண்மையை விவசாயிகள் பின்பற்ற தோட்டக்கலைத் துறையினர் தோட்டம் தோட்டமாக சென்று களப்பணியாற்ற தோட்டக்கலைத் துறை ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை