உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  இரட்டை மாட்டு வண்டி ரேக்ளா ரேஸ் போட்டி

 இரட்டை மாட்டு வண்டி ரேக்ளா ரேஸ் போட்டி

தேனி: தேனி ஒன்றியம் கோட்டூர் கோபிநாதசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி பண்டிகை, தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரேக்ளா இரட்டை மாட்டு வண்டி போட்டி நடந்தது. இக்கோயிலின் தேர்த்திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு கோட்டூரில் இருந்து டொம்புச்சேரி வரை உள்ள 8 கி.மீ., துாரம் ரேக்ளா ரேஸ் இரட்டை மாட்டு வண்டி போட்டி நடந்தது. தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் போட்டியை துவங்கி வைத்தார். இதில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்றனர். போட்டியில் தட்டான்சிட்டு, பூஞ்சிட்டு, நடுமாடு, பெரியமாடு என ஏழு பிரிவுகளில் 200க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற இரு ஜோடி மாடுகள், அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகளை எம்.பி., வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை