உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆண்டிபட்டியில் குடிநீர் தட்டுப்பாடு

ஆண்டிபட்டியில் குடிநீர் தட்டுப்பாடு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பேரூராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வாரம் இரு முறை குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி மற்றும் விரிவாக்க பகுதிகளில் 18 வார்டுகளுக்கு வைகை அணை கூட்டு குடிநீர் திட்டம், ஆண்டிபட்டி - சேடபட்டி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் உள்ளது. வார்டுகளின் அனைத்து பகுதிகளுக்கும் தற்போது வாரம் ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. வாரம் ஒரு முறை கிடைக்கும் நீரை பிடித்து இருப்பில் வைத்து பயன்படுத்துகின்றனர். போர்வெல்களில் கிடைக்கும் நீரை பயன்படுத்துகின்றனர். தற்போது கோடையின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தண்ணீர் தேவையும் அதிகரித்துள்ளது. வாரம் ஒரு முறை விநியோகிக்கப்படும் நீர் போதுமானதாக இல்லை. அனைத்து வார்டுகளிலும் வாரம் இரு முறை பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ