உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொலை முயற்சி வழக்கில் டிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் டிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறை

பெரியகுளம்: லாரி டிரைவர்களிடையே லோடு ஏற்றுவதில் முன் விரோதம் காரணமாக தென்னரசை கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட டிரைவர் பிரதீப் 36,க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.பெரியகுளம் அருகே அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் தென்னரசு 24. எ.புதுப்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் பிரதீப் 36. இருவருக்கும் இடையே லாரியில் லோடு ஏற்றுவதில் முன் விரோதம் இருந்தது. அழகர்நாயக்கன்பட்டி வேல்நகரில் டூவீலரை நிறுத்தி விட்டு நண்பர்களுடன் தென்னரசு பேசிக்கொண்டு இருந்தார். அந்த வழியாக லாரியில் சென்ற பிரதீப், தென்னரசு டூவீலர் மீது மோதி இடித்து சென்றார். இது சம்பந்தமாக 2022 அக் 19ல் அந்தப்பகுதியில் வந்த பிரதீப்பிடம், தென்னரசு,' ஏன் எனது டூவீலரை இடித்துச்சென்றாய்.' என கேட்டுள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் பிரதீப் கத்தியை எடுத்து தென்னரசு தலை, இடது கையில் வெட்டினார். ஜெயமங்கலம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பிரதீப்பை கைது செய்தனர். வழக்கு விசாரணை பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சந்திரசேகர், பிரதீப்பிற்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு வழக்கறிஞராக கற்பூரசுந்தர் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி