டிரைவர் தற்கொலை
போடி:போடி அருகே சன்னாசிபுரத்தில் வசிப்பவர் சந்தியா 24 . கணவர் ரஞ்சித்குமார் 38. டிராக்டர் டிரைவர். வயிற்று வலியால் சிரமப்பட்ார்.. சிகிச்சைக்கு பணம் வாங்குவதற்காக சந்தியா கம்பத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று உள்ளார். இந்நிலையில் ரஞ்சித்குமார் வயிற்று வலி தாங்க முடியாமல் விஷம் குடித்து விட்டு அலைபேசியில் மனைவிக்கு தகவல் கூறி உள்ளார். தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் ரஞ்சித்குமார் சேர்க்கப்பட்டு இறந்தார். சந்தியா புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.