உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டிரைவர்கள் வேலை நிறுத்தம்

டிரைவர்கள் வேலை நிறுத்தம்

தேனி : ஒருவர் மீது வாகனத்தை மோதிவிட்டு தப்பி ஓடும் டிரைவர்களுக்கு 10 ஆண்டு சிறை அல்லது ரூ. 7 லட்சம் அபராதம் விதிக்கும் 'ஹிட் அண்ட் ரன்' சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கனரக வாகன டிரைவர்கள் நலச்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை தேனி ரோட்டில் குன்னுார் டோல்கேட் பகுதியில் சென்ற கனரக வாகன டிரைவர்களுக்கு சங்க தலைவர் செந்தில்குமார் தலைமையில் நோட்டீஸ் வழங்கினர். மாவட்ட துணைத்தலைவர் சதீஸ்குமார், செயலாளர் பன்னீர் செல்வம், துணைச்செயலாளர் பாண்டியராஜன், ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி