உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆண்டிபட்டியில் பைபாஸ் இல்லாததால் ஊர்ந்து சென்ற வாகனங்கள்

ஆண்டிபட்டியில் பைபாஸ் இல்லாததால் ஊர்ந்து சென்ற வாகனங்கள்

ஆண்டிபட்டி : தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்டிபட்டி வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்களில் குலதெய்வம் கோயில் வழிபாடுக்கு சென்றதால் ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.மகா சிவராத்திரியை முன்னிட்டு தேனி மாவட்டத்தின் பல ஊர்களில் இருந்து மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் சென்று திரும்புகின்றனர். தேனியில் இருந்து மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. கார், வேன், இருசக்கர வாகனங்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் ஆண்டிபட்டி நகர் பகுதியை கடந்த செல்வதில் சிரமப்பட்டனர்.பொதுமக்கள் கூறியதாவது: கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டிபட்டி நகர் பகுதி 2 கி.மீ., தூரம் கொண்டுள்ளது. ஆண்டிபட்டியில் பைபாஸ் ரோடு வசதி இல்லாததால் அனைத்து வாகனங்களும் நகர் பகுதி வழியாக கடந்து செல்ல வேண்டும். ஆண்டிபட்டியில் சாதாரண நாட்களிலேயே போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். மகா சிவராத்திரி குல தெய்வம் வழிபாட்டுக்கு பக்தர்கள் சென்ற வாகனங்கள் ஆண்டிபட்டி நகர் பகுதியை ஊர்ந்து கடந்து சென்றதால் பலருக்கும் சிரமம் ஏற்பட்டது. ஆண்டிபட்டியில் நெருக்கடியான போக்குவரத்தை தவிர்க்க மாற்றுப்பாதை அல்லது பைபாஸ் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ