உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கண்மாய் நீரில் ஆட்டோ மூழ்கி மூதாட்டி பலி

கண்மாய் நீரில் ஆட்டோ மூழ்கி மூதாட்டி பலி

போடி; போடி அருகே பத்திரகாளிபுரம் பட்டாளம்மன் கோயில் தெருவில் வசித்தவர் பால் சின்னம்மாள் 64. பலூன் வியாபாரி. இவர் நேற்று காமராஜபுரத்தை சேர்ந்த சூர்யா என்பவரது ஆட்டோவில் மீனாட்சிபுரம் - விசுவாசபுரம் செல்லும் ரோட்டில் சென்றுள்ளார். அப்போது ஆண்டிபட்டி அருகே முத்தணம்பட்டியை சேர்ந்த மெய்யழகன் அதிவேகமாக ஓட்டி வந்த லாரி ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ நிலை தடுமாறி ரோட்டின் அருகே தடுப்புச்சுவர் இல்லாத மீனாட்சியம்மன் கண்மாய் நீரில் மூழ்கியது. அருகே இருந்தவர்கள் கண்மாய் நீரில் மூழ்கி கிடந்த பால் சின்னம்மாளை இறந்த நிலையில் மீட்டினர். போடி தாலுாகா போலீசார் லாரி டிரைவர் மெய்யழகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ