மின் திருட்டு விசாரணை
மூணாறு: குண்டளை அணையில் கழிப்பறையில் இருந்து வழியோரக் கடைகளுக்கு சட்டவிரோதமாக மின் இணைப்பு வழங்கியவர் சிக்கினார்.மூணாறு அருகே குண்டளை அணை முக்கிய சுற்றுலா பகுதியாகும். அங்குள்ள கழிப்பறையை ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருபவர்,ஆக்கிரமிப்பில் உள்ள மூன்று வழியோரக் கடைகளுக்கு சட்டவிரோதமாக கழிப்பறையில் இருந்து மின் இணைப்பு வழங்கினார். அதற்கு மின் கட்டணமும் வசூலித்து வந்தார். நீண்ட காலமாக நடந்த மின் திருட்டை மின்துறையின் விஜிலன்ஸ் பிரிவினர் கண்டு பிடித்தனர். அது தொடர்பாக விஜிலன்ஸ் பிரிவினர் விசாரணை நடத்துகின்றனர்.