உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி, : தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், மின் ஊழியர் மத்திய அமைப்பு, மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், 'அரசு மின்வாரியத்தை தனியார் மயமாக்க மாட்டோம். பிரிக்கப்பட்ட பிரிவுகள் அரசின் வசமே செயல்படும் என பஞ்சாப் மாநில அரசு, தொழிலாளர்களிடம் ஒப்பந்தம் ஏற்படுத்தியது போல், தமிழக அரசு ஒப்பந்தம் செய்திட வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். இரு அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ