உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜீப்பை சேதப்படுத்திய படையப்பா யானை

ஜீப்பை சேதப்படுத்திய படையப்பா யானை

மூணாறு : மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை எஸ்டேட் பகுதியில் உள்ள குருசடி அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான பங்களா உள்ளது. அதில் பொது மேலாளர் ஹரியப்பா குடும்பத்துடன் வசிக்கிறார். அந்த பங்களா வளாகத்தினுள் நேற்று முன்தினம் இரவு படையப்பா ஆண் காட்டு யானை நுழைந்து முகாமிட்டது. அந்த யானை இரவு 10:00 மணிக்கு பங்களாவின் முன் நிறுத்தி இருந்த ஜீப்பை சேதப்படுத்தியது. அதனை பார்த்த ஹரியப்பா வனத்துறை அதிரடி படையினருக்கு தகவல் அளித்தார். அவர்கள் யானையை விரட்டினர். அங்கிருந்து கடலார் எஸ்டேட் செல்லும் ரோட்டிற்கு சென்ற படையப்பா நேற்று காலை வாகனங்களை வழிமறித்தது. அதே பகுதியில் நேற்று பகலில் படையப்பா முகாமிட்டதால், தொழிலாளர்கள் அச்சத்துடன் நடமாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ