உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பயிற்சி நிறைவு

பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பயிற்சி நிறைவு

தேனி : ஸ்ரீவில்லிப்புத்துார் மேகமலை புலிகள் காப்பகம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 250 அரசுப் பள்ளி மாணவர்கள் இயற்கை உலா எனும் வன சுற்றுலாவிற்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் வண்ணாத்திப்பாறை, மாவூற்று வேலப்பர் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இச்சுற்றுலா, சுற்றுச்சூழல் தொடர்பான தேர்வு நடத்தப்பட்டது. சுற்றுலா, பயிற்சி நிறைவு விழாவிற்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்த் முன்னிலை வகித்தார். பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. உதவி வன பாதுகாவலர் அரவிந்த், பள்ளி ஆசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை