உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நெசவாளர்களுக்கு உபகரணங்கள்

நெசவாளர்களுக்கு உபகரணங்கள்

ஆண்டிபட்டி : சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 7 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 400க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்கள் தற்போது கைத்தறிகள், பெடல் தறிகள் மூலம் அரசின் இலவச சேலை, சீருடை துணிகள் உற்பத்தி செய்கின்றனர்.கைத்தறி நெசவாளர்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக கைத்தறி ஆதரவு திட்டத்தில் கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு அரசு மூலம் ஒதுக்கப்பட்ட நெசவு உபகரணங்களான அச்சு, விழுது, பிரேம் செட் ஆகியவற்றை எம்.எல்.ஏ., மகாராஜன் தலைமை வகித்து வழங்கினார்.மதுரை கைத்தறித்துறை உதவி இயக்குனர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். 200 கைத்தறி நெசவாளர்களுக்கு தலா ரூ.4000 மதிப்பிலான ரூ.8 லட்சம் பெறுமான உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தி.மு.க., நகர செயலாளர் சரவணன், கைத்தறி அலுவலர் செண்பகராஜா, கைத்தறி கூட்டுறவு சங்க அலுவலர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை