உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஆன்லைன் டாக்சி பிரச்னை அரசு தலையிட எதிர்பார்ப்பு

 ஆன்லைன் டாக்சி பிரச்னை அரசு தலையிட எதிர்பார்ப்பு

மூணாறு: 'ஆன்லைன்' டாக்சியால் பிரச்னைகள் தொடர்வதால், அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மூணாறில் 'ஆன்லைன்' டாக்சியால்,உள்ளூர் டாக்சி டிரைவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் ஆன்லைன் டாக்சிகளை எதிர்க்கும் சூழல் உருவாகியது. அப்பிரச்னையில் சிக்கி சுற்றுலா பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மூணாறுக்கு அக்., 30ல் சுற்றுலா வந்த மும்பையைச் சேர்ந்த ஜான்வி ஆன்லைன் டாக்சியை அழைத்தால் பிரச்னை ஏற்பட்டது. அதேபோல் மூணாறு அருகே லெட்சுமி எஸ்டேட் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கிய மேற்குவங்கத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் நவ.5ல் தேக்கடி செல்ல ஆன்லைன் டாக்சியை அழைத்தால் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் இருந்து மூணாறுக்கு சுற்றுலா வந்த இரண்டு பெண்கள் கொச்சி செல்ல நேற்று முன்தினம் ஆன்லைன் டாக்சியை அழைத்தனர்.அதனை அறிந்த உள்ளூர் டாக்சி டிரைவர்கள் சிலர் ஆன்லைன் டாக்சியை தடுத்தனர். மூணாறு போலீசார் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி பயணிகளை ஆன்லைன் டாக்சியில் அனுப்பி வைத்தனர். குழப்பம்: கேரளா போக்குவரத்துறை அமைச்சர் கணேஷ்குமார் முதலில் ஆன்லைன் டாக்சிகளுக்கு ஆதரவாகவும் பின்னர் அவற்றில் ஒரு சில நிறுவனம் தவிர பெரும்பாலான நிறுவனங்கள் அனுமதி இன்றி கார்களை இயங்குவதாக தெரிவித்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. பாதிப்பு: ஆன்லைன் டாக்சி தொடர்பான பிரச்னைகள் சமூக வலைதளங்களில் வைரலாகுவதால் பயணிகள் வருகை குறைந்து சுற்றுலாத் தொழில் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்பிரச்னையில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ