உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / எதிர்பார்ப்பு போலீஸ் கூட்டுறவு சங்கம் டிவிடெண்ட் வழங்குமா என தீபாவளி பண்டிகை சுப செலவிற்கு பயன்படுத்த ஆர்வம்

எதிர்பார்ப்பு போலீஸ் கூட்டுறவு சங்கம் டிவிடெண்ட் வழங்குமா என தீபாவளி பண்டிகை சுப செலவிற்கு பயன்படுத்த ஆர்வம்

பெரியகுளம்: தீபாவளி பண்டிகை இன்னும் 23 நாட்களே உள்ள நிலையில் காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள போலீசாருக்கு லாபத்தில் பங்கு 'டிவிடெண்ட்' தொகை விரைவில் வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை சுபசெலவுக்கு உதவியாக இருக்கும் என போலீசார்கள் தெரிவிக்கின்றனர். தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய ஐந்து சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட 31 போலீஸ் ஸ்டேஷன்கள், 6 புறக்காவல் நிலையங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் போலீசார்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை தேனி என்.ஆர்.டி., நகரில் செயல்படும் காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில், கடந்தாண்டை விட 100 உறுப்பினர்கள் அதிகரித்து 700 க்கும் அதிகமானோர் உறுப்பினர்கள் உள்ளனர். சங்க உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் வீடு கட்டுவதற்கு விண்ணப்பித்த சில தினங்களில் சம்பளத்திற்கு தகுந்தாற்போல் ரூ. ஐந்து லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதனால் போலீசார்கள் ஒவ்வொரு ஆண்டும் கடன் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடன் வழங்கும் தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்து கடன் முடியும் தருவாயில் அசலில் வரவு வைத்து கணக்கு முடிக்கப்படும். கடன் தவணணையை சம்பளத்தில் பிடித்தம் செய்து வரவு வைப்பதால் வங்கி லாபகரமாக இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு இச்சங்கம் ரூ.1.10 கோடி வரை லாபம் ஈட்டியுள்ளது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் பணம் ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு டிவிடெண்ட் ஆக உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். இதில் ரூ 7000 முதல் ரூ 25 ஆயிரம் வரை ஒவ்வொருவருக்கும் கிடைக்கும். இதனால் போலீசார் தீபாவளி பண்டிக்கைக்கு தங்கள் குடும்பத்திற்கு தேவையான புத்தாடை உட்பட பல்வேறு பொருட்கள் வாங்குவதற்கு 'சுபசெலவாக' பயன்படும். நேற்று வரை டிவிடெண்ட் வழங்க வில்லை. கடந்தாண்டு 2024 தவிர, அதற்கு முந்தைய ஆண்டுகளில் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு போலீசார் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. செப்.,கடைசியில் சம்பளம் பணம் வரவு வைக்கும் நேரத்தில், டிவிடெண்ட் பணமும் வரவு வைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என போலீசார்கள் எதிர்பார்க்கின்றனர். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி