உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கண்துடைப்பு நடவடிக்கை தேனி பொதுமக்கள் சிரமம்

கண்துடைப்பு நடவடிக்கை தேனி பொதுமக்கள் சிரமம்

தேனி: தேனி நகராட்சி சார்பில் நடந்த கண்துடைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் போஸ்ட் ஆபிஸ் ஓடைத்தெருவில் குறுக்குத்தெரு சேறும் சகதியுமாக உள்ளது.வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. மாவட்டத்தில் இரு நாட்கள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லில்லி முகாமிட்டிருந்தார். அப்போது அல்லிநகரம் நகராட்சி சார்பில் போஸ்ட் ஆபீஸ் ஓடைத்தெருவில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் சாக்கடை துார்வாரினர். சாக்கடை துார்வாரிய மண்ணை அதே பகுதியில் விட்டு சென்றனர்.நேற்று முன்தினம் பெய்த மழையில் ரோட்டோரம் கொட்டப்பட்டிருந்த சாக்கடை மண் மீண்டும் சாக்கடைக்குள் சென்றது. கழிவு நீர் பாதை அடைபட்டது. இதனால் பூமாரிம்மன் கோயில் எதிர்புறம் உள்ள குறுக்குத்தெருவில் சாக்கடை நிரம்பி உள்ளது. நீர் வடிந்த பின்பும் தெருவின் நுழைவு பகுதி சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இதனை கடந்த சென்ற பலர் வழுக்கி கீழே விழுந்தனர். கண்துடைப்பு நடவடிக்கையாக இல்லாமல் நிரந்தர தீர்வு காண நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ