உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பு: விவசாயிகள் புகார்

மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பு: விவசாயிகள் புகார்

தேனி: விவசாய பயன்பாட்டிற்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தும் பல ஆண்டுகளாக அலைக்கழிப்பதாக விவசாயிகள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., மகாலட்சுமி முன்னிலை வகித்தார். குறைதீர் கூட்டத்திற்கு முன் கலெக்டர் ஆய்வு கூட்டம் நடத்தினார். நேரில் வராத அதிகாரிகள் ஆன்லைன் மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர். பொதுமக்கள் 247 மனுக்களை வழங்கினர். ஆண்டிபட்டி தாலுகா தும்மக்குண்டு ஊராட்சி வாலிப்பாறை, அண்ணாநகர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பிச்சை, ஆண்டி, மருதுபாண்டி சடையன் உள்ளிட்டோர் வழங்கிய மனுவில், 'விவசாயம் செய்வதற்காக மின் இணைப்பு கேட்டு 10 ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்தோம். 2022ல் மின் இணைப்பு வந்ததாக கடிதம் கிடைத்தது. தொடர்ந்து தேவையான ஆவணங்கள், பொதுப்பணித்துறையின் தடையில்லா சான்று ஆகியவற்றை மின்வாரியத்தில் சமர்ப்பித்துள்ளோம். ஆனாலும் 3 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பு செய்கின்றனர். மின்சாரம் கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றிருந்தது. கொடுவிலார்பட்டி ராஜீவ் காந்தி தெரு மணி பொதுமக்கள் சார்பாக வழங்கிய மனுவில், அப்பகுதியில் உள்ள தனிநபர் ஒருவர் பொதுவான நீர்ஓடையை ஆக்கிரமத்துள்ளார். அந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றிருந்தது. ஆக்கிரமிப்பு அகற்றுங்கள் தேனி நகராட்சி 5வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரபா மனுவில், 'தேனி நகர்பகுதியில் பெரியகுளம் ரோடு, கம்பம் ரோடு, மதுரை ரோடுகளில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்ற நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை இல்லை . ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை