சோளம் விளைச்சல், விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
போடி: போடி பகுதியில் சோளம் விளைச்சல் மட்டும் இன்றி விலையும் அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.இப்பகுதியில் 3 ஆயிரம் ஏக்கரில் சோளம் சாகுபடி ஆகிறது. இப்பயிர் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் சீசனாகும்.இரண்டு ஆண்டுகளுக்கு முன் சோளம் விளைச்சல் அதிகரித்தும் விலை இல்லாத நிலையில் குவிண்டால் ரூ.1700 முதல் ரூ.1800 வரை விலை போனது. கடந்த ஆண்டு குவிண்டால் ரூ.2200 முதல் ரூ.2300 வரை விலை இருந்தது.இந்தாண்டு விளைச்சல் மட்டும் இன்றி விலையும் அதிகரித்துள்ளது. சோளம் நன்கு விளைந்த நிலையில் குவிண்டால்ரூ.2400 முதல் ரூ.2450 வரை விவசாயிகளிடம், வியாபாரிகள் விலைக்கு வாங்கிச் செல்கின்றனர்.விவசாயிகள் கூறுகையில் : உரம் விலை, கூலித் தொழிலாளர்கள் சம்பளம் உயர்ந்த நிலையில் சோளத்திற்கு போதிய விலை இருந்தால் மட்டுமே கட்டுபடியாகும். கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு சோளம் நல்ல விளைச்சல் மட்டும் இன்றி விலையும் அதிகரித்துள்ளது. குவிண்டால் ரூ.2450 வரை விவசாயிகளிடம் வியாபாரிகள் விலைக்கு வாங்குகின்றனர். விளைச்சல், விலையும் அதிகரித்து உள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்றனர்.