உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பிரதமர் ஊக்கத் தொகை பெறும் திட்டத்தில் இணைய... அனுமதி இல்லை; விவசாயிகள் ஆறு ஆண்டுகளாக காத்திருக்கும் அவலம்

பிரதமர் ஊக்கத் தொகை பெறும் திட்டத்தில் இணைய... அனுமதி இல்லை; விவசாயிகள் ஆறு ஆண்டுகளாக காத்திருக்கும் அவலம்

2018 டிசம்பரில் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் மத்திய அரசின், 'பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்டம்' அறிமுகமானது. இதில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளில் மொத்தம் ரூ.6 ஆயிரம் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் பயனாளிகளின் முழு தகவல்களையும் அரசு கண்காணித்தது. அதில் அரசுப் பணியில் உள்ளவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், ஒரு வீட்டில் இரு பயனாளிகள், ஏற்கனவே ஊக்கத்தொகை பெற்ற நிலையில் உயிரிழந்தவர்கள் என்பன உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, கடந்தாண்டு ஒரு சிலருக்கு ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டது. அனைத்து வட்டாரங்களிலும் 800 பேர்கள் விதிகளுக்கு புறம்பாக ஊக்கத் தொகை பெறுவது கண்டறியப்பபட்டு, அவர்கள் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டும் ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 2019க்கு பின், இத்திட்டத்தின் கீழ் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு ஊக்கத் தொகை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வேளாண் அதிகாரிகளிடம் சிலர் கூறியதாவது: விதிகளுக்கு புறம்பாக ஊக்கத் தொகை பெற்ற 20 சதவீதம் பேர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். ஆதார் இணைப்பு, இ.கே.ஒய்.சி., (Electronic know your Customer) பதிவுகள் மூலம் தரவுகள் பெறப்பட்டு கழிக்கப்பட்டுள்ளன. 2019 க்கு பின் புதிய விண்ணப்பங்களுக்கு இது வரை அனுமதி இல்லை. அதாவது 2019 க்கு பின் நிலங்கள் வாங்கியிருந்தாலும், 2019 க்கு முன் இந்த திட்டத்தில் சேராமல் விடுபட்டவர்களும் இந்த திட்டத்தில் ஊக்கத் தொகை பெறுவதற்கு இன்னமும் அனுமதி கிடைக்கவில்லை., என்றனர். விவசாயிகள் கூறியதாவது: 2019 க்கு முன் விடுபட்ட விவசாயிகள், 2019 க்கு பின் நிலங்கள் வாங்கிய விவசாயிகளின் விண்ணப்பங்களை மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். கடந்த 6 ஆண்டுகளாக இ சேவை மையங்களில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். மத்திய அரசு புதிய விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்., என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை