மேலும் செய்திகள்
செண்டு பூக்களுக்கு விலை இன்றி விவசாயிகள் கவலை
10-Sep-2025
தேனி: தேனி மாவட்டத்தில் சின்ன வெங்காயம் விளைச்சல் அதிகரித்து உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலையில் உள்ளனர். மாவட்டத்தில் போடி, ராசிங்காரபுரம், தேனி ஒன்றியம் வெங்கடாஜலபுரம், ஸ்ரீரெங்காபுரம், குன்னுார், கண்டமனுார் பகுதிகளில்சின்னவெங்காயம் அதிகளவில் சாகுபடியாகிறது. சாரல், வெயில் என சீதோஷ்ண நிலை மாறி வருவதால் வெங்காயம் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். ஸ்ரீரெங்காபுரம் ஊராட்சியில் 6 ஏக்கரில் சின்னவெங்காயம் பயிரிட்ட விவசாயி சுதந்திர சுந்தரம் கூறியதாவது: வெங்காயம் 70 நாட்கள்பயிராகும். தற்போது ஏக்கருக்கு 50 மூடைகள் கிடைக்கிறது. (ஒரு மூடை 50 கிலோ) ஒரு கிலோ ரூ.28 முதல் ரூ.25 விலையில் கொள்முதல் செய்து, மதுரை ,திண்டுக்கல்லில் உள்ள வெங்காய சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. விளைச்சல் அதிகரித்த நிலையிலும் விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளோம். நடவு, பராமரிப்பு என ஏக்கருக்கு ரூபாய் ஒரு லட்சம் செலவழிக்கிறோம். ஆனால் லாபம்இல்லாத நிலைதான் தொடர்கிறது என்றார்.
10-Sep-2025