உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விதை நெல் கொள்முதலில் விவசாயிகள் ஆர்வம்

விதை நெல் கொள்முதலில் விவசாயிகள் ஆர்வம்

கம்பம்:தனியார் கடைகளில் விதை நெல் கொள்முதல் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. தற்போது முதல் போக சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். கம்பம், சின்னமனுார் பகுதியில் ஆர். என். ஆர். என்ற வீரிய ஒட்டு ரகத்தை 80 சதவீத விவசாயிகள் தனியார் கடைகளில் வாங்கி வைத்துள்ளனர். கடந்தாண்டு முதல் போகத்தில் நல்ல மகசூல் தந்ததால், ஆர்.என். ஆர். ரகத்தை விவசாயிகள் விரும்புகின்றனர்.அறுவடை காலத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், 509 ரகத்தை தேர்வு செய்ய வலியுறுத்துவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.காரணம் கடந்த சீசனில் கொள்முதல் செய்த ஆர்.என். ஆர். ரகம் இருப்பு உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் விவசாயிகளோ ஆர்.என்.ஆர். ரகத்தை கடைகளில் வாங்கி விட்டனர். இதே ரகத்தை வேளாண் துறையும் இருப்பு வைத்துள்ளது. ஆனால் இதுவரை விற்பனை அறிவிப்பு வெளியிடவில்லை. காரணம் முதல் போகத்திற்கு தண்ணீர் திறப்பு பற்றி அரசு இன்னமும் அறிவிக்கவில்லை என்பதால் வேளாண் துறை மவுனமாக உள்ளனர். ஆனால் விவசாயிகளோ தனியார் கடைகளில் விதை நெல் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை