உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நெல் நடவு கூலி உயர்வு விவசாயிகள் புலம்பல்

நெல் நடவு கூலி உயர்வு விவசாயிகள் புலம்பல்

கம்பம்: முதல் போக நெல் நடவில் தொழிலாளர்களின் கூலி உயர்ந்துள்ளது என விவசாயிகள் புலம்புகின்றனர்.கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. முல்லைப் பெரியாறு பாசனத்தில் நடைபெறும் இரு போக சாகுபடியில் தற்போது முதல் போக சாகுபடிக்கான நடவு பணிகள் ஆங்கூர் பாளையம், சாமாண்டிபுரம், காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் துவங்கியுள்ளது. நடவு பணிகளுக்கான தொழிலாளர் கூலி கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு எக்டேருக்கு கடந்தாண்டு ரூ. 8800 கூலி வழங்கப்பட்டது. அதில் ரூ.8400 கூலி , ரூ.400 மேற்பார்வையாளர் கமிஷனாகும். இந்தாண்டு ஒரு எக்டேருக்கு நடவு கூலி ரூ.9400 என உயர்ந்துள்ளது. இதில் ரூ.9 ஆயிரம் கூலியாகவும், ரூ.400 கமிஷன் என வசூலிக்கின்றனர். தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் கூலி உயர்வு கொடுப்பதை தவிர வேறு வழியில்லை என்று புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை