உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஏலத்தோட்டங்களில் மண்,காய்ப்புத் திறன் பரிசோதனைக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

ஏலத்தோட்டங்களில் மண்,காய்ப்புத் திறன் பரிசோதனைக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

கம்பம்:ஏலத் தோட்டங்களில் மண் மற்றும் காய்ப்பு திறன் பரிசோதனை செய்து விவசாயிகளுக்கு உதவ ஸ்பைசஸ் வாரியம் முன்வர வேண்டும் என ஏல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஏலக்காய் சாகுபடி செய்யும் நாடுகளில் இந்திய ஏலக்காய் மட்டுமே தரமுள்ளதாக கருதப்படுகின்றது. கொள்முதல் செய்யும் வளைகுடா நாடுகள் இந்திய ஏலக்காயை விரும்பி கொள்முதல் செய்வது சாட்சியாகும். இடுக்கி மாவட்டத்தில் நல்லாணி என்ற ரகம் சாகுபடியாகிறது. நடவு செய்யும் செடிகள் 30 முதல் 40 ஆண்டுகளுக்கு காய்க்கும். ஒராண்டிற்கு 6 முறை காய் பறிப்பார்கள். ஒவ்வொரு காய் பறிப்பிற்கும் 40 நாட்கள் இடைவெளி உண்டு . கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மகசூல் ஏக்கருக்கு 600 கிலோ என இருந்தது, தற்போது படிப்படியாக குறைந்து 400 கிலோ என உள்ளது. சீதோஷ்ண நிலை மாற்றம், பூச்சி மருந்து அதிகம் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் குன்றியது, புதிய நோய் தாக்குதல் என பல காரணங்களால் காய்ப்பு திறன் குறைத்துள்ளது. ஆண்டுதோறும் ஏலக்காய் உற்பத்தி அதிகரித்திருப்பது போல் தெரியும். ஆனால் அதற்கு காரணம் சாகுபடி பரப்பு அதிகரிப்பதே என்கிறார் முன்னோடி விவசாயி அருண்பிரசாத். அவர் கூறுகையில், 'ஏலக்காய் செடியின் காய்ப்பு திறன் குறைந்து வருகிறது. மண் வளமும் பாதித்துள்ளது. இதை சீரமைக்க ஸ்பைசஸ் வாரியம் உதவ வேண்டும்,' என்றார். ஏற்கெனவே கடந்தாண்டு உடுப்பன் சோலை, இடுக்கி தாலுகாக்களில் 19 கிராமங்களில் மண் பரிசோதனை செய்து அதன் விபரங்களை தெரிவித்தனர். மாவட்டம் முழுவதும் அதை விரிவுபடுத்தி ஏலத்தோட்டங்கள் முழுமையும் மண் பரிசோதனை செய்து, குறைந்து வரும் காய்ப்புத் திறனை அதிகரிக்க, ஸ்பைசஸ் வாரியமும், ஏலக்காய் ஆராய்ச்சி நிலையங்களும் முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ