உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாயிகள் பகலில் மின் மோட்டாரை பயன்படுத்துங்கள்

விவசாயிகள் பகலில் மின் மோட்டாரை பயன்படுத்துங்கள்

தேனி: ''விவசாயிகள் பகலில் மின்மோட்டார்களை பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்ள வேண்டும்.'' என, தேனி கோட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தெரிவித்தார்.அவர் கூறியிருப்பதாவது: புதுப்பிக்கக்கூடிய சூரிய மின் ஆற்றலை பயன்படுத்துவதன் மூலம் எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற்று வருகிறது. மேலும் சுற்றுச்சூழல் மாசும் குறைகிறது. இதனால் மின்னாற்றலை தயாரிப்பில் ஏற்படும் மாசினை குறைக்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில்முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டும். இதனால் விவசாயிகள் பகலில் அதிக அளவில் சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இதற்கு விவசாயிகள்தங்களது மின் மோட்டார்களை பகல் நேரங்களில் பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை