உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மானாவாரியை மேம்படுத்த பண்ணைய திட்டம்

மானாவாரியை மேம்படுத்த பண்ணைய திட்டம்

தேனி: தோட்டக்கலைத்துறை சார்பில் மாவட்டத்தில் மானாவாரி நிலங்களை மேம்படுத்த ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.இத்திட்டம் பற்றி தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாவட்டத்திற்கு 240 அலகுகள் இலகு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு அலகு அமைக்க ரூ.30ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க விருப்பமுள்ள விவசாயி ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். கால்நடைகள் வாங்க ரூ.20ஆயிரம், காய்கறி விதைகள் வாங்க ரூ.2ஆயிரம், ரூ.400 மதிப்பிலான பழக்கன்றுகள், ரூ.6ஆயிரம் மதிப்பிலான மண்புழு உரக்கூடம், ரூ.1600 மதிப்புள்ள தேன் வளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை