மகள் கடனுக்காக தந்தை தற்கொலை
பெரியகுளம், : வடுகபட்டியில் தீபாவளி பண்டில் மகள் கவுசல்யாவின் கடனை 3 ஆண்டுகளாக அடைத்து வந்த தந்தை ராசு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பெரியகுளம் அருகே வடுகபட்டி நாயக்கர் தெரு ராசு 73. இவரது மகள் கவுசல்யா தீபாவளி பண்டிகைகான சீட்டுத் திட்டத்தில் சேர்ந்து, வசூல் செய்த பணத்தை கட்டமுடியவில்லை. இதனால் கடன்பட்டார். கவுசல்யா கடனை ஏற்றுக்கொண்டு ராசு 3 ஆண்டுகளாக கடன்காரர்களுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது கடன் கட்ட முடியாத நிலையில் மனவேதனையில் மாட்டுக் கொட்டகையில் ராசு தற்கொலை செய்து கொண்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.-