குடோனில் தீ விபத்து
தேனி:தேனி அருகே கொடுவிலார்பட்டியில் பழைய இரும்பு குடோன்--- உள்ளது. இங்கு நேற்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து உதவி மாவட்ட அலுவலர் பாலமுருகன் தலைமையில் தேனி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ரூ. பல ஆயிரம் மதிப்புள்ள பழைய பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. விபத்து பற்றி பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.