உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தீயணைப்பு, வனத்துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி

தீயணைப்பு, வனத்துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி

தேனி: அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைகோயில் வளாகத்தில் தீயணைப்பு, வனத்துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.தேனி வனசரகர் சிவராம் தலைமை வகித்தார். தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் நாகராஜன் முன்னிலை வகித்தார். இப் பயிற்சியில் அவசர காலத்தில் எவ்வாறு செயல்படுவது என பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு, வனத்துறை சார்பில் பயிற்சி வழங்கப்பட்டது. வீடுகள், வணிக பகுதிகளில் ஏற்படும் தீயை எவ்வாறு கட்டுப்படுத்துவது, தீயணைப்பு கருவிகளை எப்படி பயன்படுத்துவது, அவசர காலம், விபத்து ஏற்பட்டால் செயல்படுவது உள்ளிட்டவை பற்றி செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் தேனி கம்மவார் சங்க மெட்ரிக் பள்ளி துணை முதல்வர் முருகன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் இளங்கோவன், பள்ளி மாணவர்கள், அப்பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ