கல்லுாரி மாணவிகளு க்கு உணவுப்பொருள் பாதுகாப்பு பயிற்சி
கூடலுார்:கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில் மாணவிகளுக்கு உணவுப் பொருள் பாதுகாப்பு, தர நிர்ணய பயிற்சி வழங்கப்பட்டது.செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இணைச் செயலர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி முன்னிலை வகித்தனர். முதல்வர் ரேணுகா வரவேற்றார். உயிர்வேதியல் துறை, உயிர் தொழில்நுட்பவியல் துறை, உணவு மற்றும் ஊட்டச்சத்துத்துறை இணைந்து நடத்திய இப்பயிற்சியில் பரிக்சன் எப்.எஸ்.எஸ்., நிறுவனத்தின் பயிற்றுநர் கார்த்தி கலந்து கொண்டார். உணவு பாதுகாப்பு நடைமுறைகள், தரக் கட்டுப்பாடுகள், சட்ட விதிகள், பாக்கெட்டுகளில் விற்கப்படும் எண்ணெய் வகை உணவுகள் வாங்குவதில் கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டன. துறைத் தலைவர்கள் சுரேகா, பாரதி, தவராணி, சுந்தர வடிவு, விரிவுரையாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.