குமுளி மலைப் பாதையில் குரங்குகளுக்கு உணவை வீச வேண்டாம் வனத்துறை அலுவலர்கள் எச்சரிக்கை
கூடலுார் : 'குமுளி மலைப்பாதையில் வாகனத்தில் செல்பவர்கள் குரங்குகளுக்கு உணவை வீசி விட்டுச் செல்ல வேண்டாம்.'என,வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய வழித்தடமான குமுளி மலைப் பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். இப்பகுதியில் குரங்குகள் அதிகம். சபரிமலைமண்டல, மகரவிளக்கு உற்ஸவம்துவங்கியுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும்நுாற்றுக்கணக்கானபக்தர்களின் வாகனங்கள் இவ்வழியாக சென்று திரும்புகின்றன.வாகனங்களில் செல்பவர்கள் தாங்கள் கொண்டுவரும் உணவு பொட்டலங்களை மலைப்பாதையில் வீசிவிட்டு செல்கின்றனர். மேலும் வாகனங்களை நிறுத்தி குரங்குகளுக்கு பழங்கள்,தின்பண்டங்களை கொடுக்கின்றனர். இதனால் குரங்குகள் கூட்டமாக ரோட்டோரங்களில் உலா வருகின்றன.தற்போது வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் குரங்குகள் ரோட்டை குறுக்கிடும்போது மிகப்பெரிய விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் வீணான உணவுப் பண்டங்களை குமுளி ரோட்டில் வீசி விட்டு செல்பவர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.மகரவிளக்கு, மண்டல கால உற்ஸவம் முடியும் வரைமலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.