மேலும் செய்திகள்
ராணுவ வீரரை கத்தியால் குத்திய 7 பேர் கைது
07-Jun-2025
கம்பம்: கம்பம் முன்னாள் பா.ஜ., தலைவர் திருமால் 47, என்பவரிடம் பணம்,டூவீலர் பறித்து தாக்குதல் நடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.கம்பம் தாத்தப்பன்குளத்தில் வசிப்பவர் திருமால் 47, இவர் மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு நேற்று முன்தினம் இரவு கம்பம் வந்தார். டூவீலரில் வீட்டிற்கு சென்றார். பின் அதிகாலை 1 மணிக்கு வேலப்பர் கோயில் அருகே சென்ற போது, அங்கு நின்றிருந்த இருவர், திருமாலை வழிமறித்து தாக்கினர். பிளேடால் உடலை கிழித்தும், அவர் பாக்கெட்டில் இருந்த ரூ.500, ஐ பறித்துள்ளனர். பின் அவரது டூவீலரையும் பறித்து தப்பி ஒடினர். புகாரின் பேரில் கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி விசாரித்து கம்பம் மணிநகரத்தை சேர்ந்த ராஜ்குமார் 27, பார்க் ரோட்டை சேர்ந்த வடிவேல் 42, கைது செய்து டூவீலர் மற்றும் பணம் ரூ.500 மீட்டார்.
07-Jun-2025