உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் விபத்தில் நால்வர் காயம்

டூவீலர் விபத்தில் நால்வர் காயம்

தேனி: கண்டமனுார் ரங்கநாதர்கோவில் தெரு தனியார் நிறுவன ஊழியர் பொன்சிவா 28. இவர் டூவீலரில் உடன் பணிபுரியும் கார்த்திக்கை ஏற்றிக் கொண்டு புது பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் இருந்து பத்திர ஆபிஸ் ரோட்டில் சென்றார். இவருக்குப் பின்னால் டூவீலரில் வடபுதுப்பட்டி தினேஷ்குமார், சுப்புராஜ் வந்தனர். தினேஷ்குமார் ஓட்டிய டூவீலர் பொன்சிவா ஓட்டிய டூவீலரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நால்வரும் காயமடைந்தனர். சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பொன்சிவா புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ