உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் நான்காவது வாரத்திருவிழா

குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் நான்காவது வாரத்திருவிழா

சின்னமனூர்: குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழாவின் நான்காவது வாரத்திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல், சுவாமி தரிசனம் செய்தனர். குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் பகவான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தாலும், ஆடி மாதம் பெருந்திருவிழா கொண்டாடப்படும். மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள். ஆடி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் திருவிழா நடைபெறும். மூன்றாவது வாரம் பெருந்திருவிழாவாக கொண்டாடப்படும். இந்தாண்டு நேற்று நான்காவது வாரத் திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக சன்னதிக்கு எதிரில் ஓடும் சுரபி நதியில் குளித்து விநாயகர் வழிபாடு, காக்கை வாகனம் வாங்கி வைப்பது, பொரி மற்றும் எள்ளு, உப்பு போன்றவற்றை தலையை சுற்றி போடுவது போன்ற நேர்த்தி கடன்களை செய்தனர். வரும் ஆக.16ல் 5வது வாரத் திருவிழா நடைபெறும் என்று செயல் அலுவலர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ